அர்த்தமுள்ள கனவு!

Updated: Apr 13சமைக்க தெரியாதவன் ஒருவன் ஒரு நல்ல அரண்மனை உணவை உண்டு விட்டு, அந்த உணவின் சுவையை நினைவில் கொண்டு தன் கைக்கு வந்தது போல சமைத்தானாம், அந்த உணவும் அவன் எண்ணிய சுவை போல கிட்ட தட்ட வந்துவிட்டதாம்.

அதற்காக அவன் உடனே அரண்மனை சமயல்க்காரன் ஆகிவிட முடியாதே!

அவ்வாறு அவன் எண்ணினால் அது அவனுடைய மூடத்தனம், ஆனால் அவன் அந்த சமையலை அடிக்கடி செய்து பழகிக்கொண்டால் அவன் விரும்பியவருக்கு அரண்மனை சுவை கொண்ட உணவு அளிக்கலாம்,பொருள் ஈட்ட கூட அந்த அரைகுறை சமையலை பயன்படுத்தலாம், எதுவும் எடுபடாது என்றால் அவனே அந்த அரண்மனை சுவை கொண்ட உணவை வேண்டிய போது சாப்பிடலாம்.அவன் அதை இன்னும் பக்குவமாக நன்கு பழகிக்கொண்டால் ஒரு நாள் அரண்மனைக்கு சமையல்க்காரன் கூட ஆகலாம்!


உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்து ஆகாது உண்மை தான். அதற்காக அக்குருவி பருந்துக்கு நிகராக பறக்க கூடாது என்று பருந்தும் எண்ணக்கூடாது குருவியும் எண்ணக்கூடாது. ஏன் என்றால் பறவைகளின் மகிழ்ச்சி பறப்பத்திலே தான் தவிற கொண்ட உருவத்தில் இல்லை.


அதனால் ஆசைப்படு நீ யாராக வாழ மாற நினைக்கிறாயோ அதுபோல் ஆகவேண்டும் ஆசைப்படு. ஆசை மட்டும் படாமல் அதுபோல வாழவும் முயற்சி செய், திடீர் என்று ஒரு நாள் நீ யாராக மாறவேண்டும் நினைத்தாயோ மாறி விடுவாய், மாறவில்லை என்றாலும் கொஞ்சம் தேறிடுவாய்!


AUTHOR:

SANTHOSH GANDHI (UX Researcher & Writer)58 views0 comments